தமிழ் செய்திகள்

(Updated Every 15 minutes)
Share    

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி, பீட்டர் முகர்ஜி ...
தினமணி ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோர் மீது மும்பை சிபிஐ சிறப்பு... --

1,500 போலீசார்! எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத அ.தி.மு.க., சசிகலாவுக்கு... எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்வைத்து அராஜகம் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார்

எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, பாதுகாப்பு அளிக்க, நேற்று, 1,500 போலீசார் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்வைத்து நடந்த, இந்த அராஜகத்தால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக, புகார் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆருக்கு நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடான, சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தில் ...


தெரு முனைகளில் திரளுங்கள்.. நாம் யாரென்று காட்டுவோம்
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ, மாணவியர், பெண்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக உரத்துக் குரல் கொடுத்து தமிழகத்தையே அதிர வைத்தனர். இந்தியாவைத் திரும்பிப் பார்க்க,

ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவிக்க வந்த சரத்குமாரை துரத்திய போராட்டக்காரர்கள்
அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்கி யானையைத் தாக்கிய காட்டு யானைகள்
கோவை குற்றாலம் அருகே அமைத்திருக்கும் சாடிவயல் யானைகள் முகாமில் நேற்று இரவு காட்டு யானைகள் நுழைந்தது. அவை அங்கு இருந்த சுஜய் என்னும் கும்கி யானையை பலமாக தாக்கின. காட்டு யானைகளின் இந்த தாக்குதலில், கும்கி சுஜயின் வலது தந்தம் உடைந்தது. கும்கி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.